கார்த்திகை தீபம் எப்போதும் என் வாழ்க்கையில் மிகவும் தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத பண்டிகைகளில் ஒன்றாகும்,
ஏனென்றால் அது என் அம்மாவைப் பற்றிய நினைவுகளை மீட்டளிப்பவை . இது பண்டிகைமகளிருக்கு
முக்கியத்துவம்
வாய்ந்த
பண்டிகைகளில் ஒன்றாகும் . இந்த பண்டிகை நாள் முழுதும் விரதம் இருப்பது மற்றும் மாலை
வேலையில்
வீடு முழுதும் அகல் விளக்கு
ஏற்றுவது
முக்கிய
நிகழ்வு. .
பொதுவாக
அம்மா
கொஞ்சம்
நோய்வாய்ப்பட்டவர்
எனவே அப்பா அம்மாவை விரதம் இருக்க வேண்டாம் என்று சொல்வார் ஆனால் அவர் பேச்சை கேட்க்க மாட்டார், காபி கூட
உட்கொள்ளாமல்
நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள். சமையல் செய்ய வீட்டை சுத்தம் செய்ய என்று கடினமாக
செய்வதாலும், உணவு
இல்லாமல்
நீண்ட
நேரம்
இருப்பதாலலும் நிச்சயமாக் அன்று ஜுரம் வந்துவிடும்.
விரதம் மட்டுமல்லாமல் அகல் விளக்கு ஏற்றுவது பெரிய
வேலை எங்கள் வீடு சற்றே பெரிய வீடு அதனால் சுமார் 30 /40 விளக்கிற்கு குறையாமல் ஏற்றவேண்டும். விளக்கு ஏத்தறது பெரிய வேலை,
கல்யாணமுருங்கை இலை மேல பசுஞ்சாணத்தை வைத்து அதன் மேல் அகல் வைத்து ஏற்ற வேண்டும்.நான் எப்போதும் அம்மாவுக்கு உதவியாக
இருப்பேன், மேலும் இது எனக்கு மிகவும் பிடித்தமான
ஒன்று. அவங்க ரெடி பண்ணி தர தர நான் ஒன்னொன்னா , திண்ணை,மாடங்கள்,
மாட்டுகொட்டகை,குப்பைமேடு கிணறு, அரிசிபானை எல்லா இடத்திலும் வைக்கவேண்டும்,
கார்த்திகை மாதம் என்பதால் சில நேரங்களில்
மழை பெய்யும்.அப்போது ஏற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும்
எல்லாம் முடிந்து
மாலைதான் அம்மா தீபம் பார்த்திவிட்டு சாப்பிடுவார் அப்போதும் அரிசி சாப்பாடு கிடையாது
,பழங்கள் இளநீர் மற்றும் கடலை பருப்பு உக்கிளிதான் அப்போதெல்லாம் ஆப்பிள் சாத்துகுடி பழங்கள்
அரிதாகத்தான் கிடைக்கும், அப்பா, அம்மாவுக்கு விரதம் முடித்து சாப்பிடும் போது கட்
பண்ணி கொடுப்பார், நாங்களெல்லாம் (உமா கர்ணா,குப்பன் ) தூர இருப்போம் ஆனால் சாவித்திரி
பகலெல்லாம் நல்ல சாப்பிட்டுவிட்டு மாலை விரதம் இருக்கிறேன் என்று அம்மாவுடன் பழம் சாப்பிடும் (அப்பா செல்லம்).
அப்பா கவனிக்காத நேரத்தில் எங்க கிட்ட பழம், தேங்காய் எல்லாம் அம்மா தூக்கி தூக்கி
போடுவாங்க, நாங்க கேட்ச் புடிச்சி சாப்பிடுவோம்.
அந்த நாட்களில் எங்கள் ஊரில் தீபாவளியை விட கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாட
படும் பாட்டாசுகள் வெடிப்பார்கள். ஆனால் நாங்க பட்டாசு வெடிக்க முடியாது அப்பா
வாங்கிவரும் பட்டாசை எல்லாம் எங்க வீட்டு ஆள் நாகப்பன் கிட்ட கொடுத்தது வெடிக்க
சொல்வார் நாங்களெல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். ஒரு மத்தாப்பும்
ஒரு கேப், ஒரு சுறு சுறு வத்தியும் நாங்க
வெடிக்க முடியும். ஆண் பனங்காயில் இருந்து
செய்யப்படும் “மாவலி” என்று ஒரு சொக்க பனை
கொளுத்தி சுற்றுவோம்.
எல்லாம் முடிந்து நாடு இரவில் அம்மா வுக்கு நிச்சயம்மாக கடுமையான ஜுரம் வந்து
விடும் ஒரு சில சமயங்களில் வலிப்பும் வந்து விடும், நாங்களெல்லாம் மிகவும் பயந்து
விடுவோம், இரவு முழுதும் தூங்க மாட்டேன் அம்மா மூக்கில் கை வச்சி அடிக்கடி மூச்சு
விடராங்கலான்னு பயத்துடன் பார்ப்பேன். எங்க அம்மா இறந்து விடுவார் என்று நினைத்து
பார்க்கவே நான் பயப்படுவேன். இவை எல்லா கனவாக கானலாக போய்விட்டது.
சர்கஸில் ஒரு கலைஞர் ஒரே
சமயத்தில் பல பந்துகளை தட்டி விளையாடுவார் ஒரு பந்து அல்லது சில பந்துகளோ தவறி
விழுந்து விட்டால் சர்கஸில் கலைஞர் விழுந்துவிட்ட பந்துகளை பற்றி கலைபடாமல்
இருக்கின்ற பந்துகளை தட்டி விளையாடுவார். விழுந்த பந்தை கவனித்தால் இருக்கின்ற
பந்தும் விழுந்து ஆட்டம் முடிந்து விடும். அதைப்போலவே நானும் இருக்கின்ற பந்திகளி
வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறேன் (வாழ்கிறேன்.) இந்த ஆண்டும் கார்திகை தீபம்
வந்தது கார்த்திகை தீபம் ஏற்றினோம்
NOW I AM PLAYING MY GAME WITH REMAINING BALLS
No comments:
Post a Comment