Friday 27 March 2020


                        எனது ஆருயிர் நண்பர் திரு சுரேஷ் சந்திரகுமார் அவர்கள்தனது முக நூல் பக்கத்தில் write down your own  autobiography during his lock down – என்று பதிவிட்டிருந்தார். திரு சுரேஷ் எனது ஆருயிர் நண்பராக இருந்தாலும் நாங்கள்  இருவரும் நேரெதிரான சித்தாந்தங்களில் பயணிப்பவர்கள் ஆனால் நாங்கள் எப்போதும் ஒருவர்மீது சேற்றை வாரி இறைத்து கொணடதில்லை சில சமயங்கள் பரஸ்பரம்   சந்தானம் பூசி கொண்டதுண்டு. அவர் சொன்னபடி இந்த இறுக்கமான நேரத்தில் என் எண்ணங்களை எழுதுகிறேன். உடன்பாடு  இருந்தால் லைக் பண்ணுகள்  எதிர்மறையாய் இருந்தால் விமரிசியுங்கள் ஆனால் தயவு செய்து என்னை  அடையாளப்படுத்தி விடாதீர்கள், உங்களில் ஒருவன் நான் எனக்கு எந்த அடையாளமும் இல்லை கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல் கேள்விகளால் வேள்வி செய்வேன் – எனவே நீங்களும் வாருங்கள் வேள்விகளால் ஞானம் பெறுவோம்  
                            நமது சமூகத்தில் எதிர்பாராமல் ஏற்படும் சில நிகழ்வுகள் நமது பொருளாதாரம்,வாழ்வியல் தனிமனித உறவுகள்,மற்றும் கலாச்சாரத்தில்,மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சில நிகழ்வுகள் நமக்கு சில சேதிகளை சொல்கின்றன அல்லது நமது சில நீண்ட நெடுங்கால நம்பிக்கையை தகர்த்து விடுகின்றன. உதாரணமாக காயாஸ் தியரியின் படி இந்த பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகளும் ஒன்றோடு சம்பந்த பட்டவை, சில செயல்கள் உடனடியாக விளைவுகளை ஏற்படுத்தும்  சில செயல்கள் குறிப்பிட்ட  காலத்திற்கு பிறகு விளைவுகளை ஏற்படுத்தும்  ஆனாலும் ஒரு தொடர்பு (கலமஹாசன் தசாவதாரத்தில் சொல்லும்  பட்டாம்பூச்சி உதாரணம் ) இணைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்
                         நமது நாட்டை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த  மனித சமுதாயத்தையே உலுக்கிக்கிகொண்டிருக்கும் ஒற்றை சொல் Govid 19 என்று சொல்லப்படும் கொரானா. இன்று  உலகமெங்கும் உச்சரிக்கப்டும் இந்த ஒற்றை சொல் நமது சமூக, பொருளாதாரம், அன்றாட வாழ்வியல் முதலிய எல்லாவற்றிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இந்த ஒட்டு மொத்த உலகத்தையே வீட்டுக்குள் முடக்கி போட்டு விட்டது. ஆனாலும் நமக்கு ஏற்பட்டுள்ள இந்த  குழப்பமான, பின்னிணைந்த தன்மையை உணர்ந்துகொள்வது நமக்கு புதிய நுண்ணறிவு, சக்தி மற்றும் ஞானத்தை அளிக்கும்.. எடுத்துக்காட்டாக, வளிமண்டலத்தின் சிக்கலான, குழப்பமான இயக்கவியலைப் புரிந்துகொள்வதன் மூலம், ஒரு பைலட் தந்து விமானத்தை  விரும்பிய இடத்திற்கு வழிநடத்த முடியும். எனவே இந்த தோடர்வினையை சரியாக  புரிந்துகொள்வதன் மூலம், நமது நீண்டகால நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்கலாம் அல்லது நன்மை  விளைவிக்கும் செயல்களை பின்பற்றலாம். எல்லா நன்மைகளிலும் ஒரு தீமை உண்டு எல்லா தீமைகளிலும் ஒரு நன்மை உண்டு இது பொது  நியதி. கொரான என்ற இந்த தீமை ஏற்படுத்திய நன்மைகள்  அல்லது படிப்பினைகளை ஒவ்வொரு துறையாக பார்ப்போம்


திருமணம் மற்றும் விழாக்கள்:
                            சுய ஊரடங்கு விதைக்கப்பட்ட பிறகு நமது எல்லா செயல்களும் முடக்க பட்டுவிட்டன ஆனாலும் சில தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு விதி விளக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் நிச்சயிக்க பட்ட திருமணங்கள். முன்னர் பெரிய பெரிய மண்டபங்களில் நடத்த குறிக்கபட்ட மணவிழாக்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்கள் இருபது அல்லது முப்பது பேர் முன்னிலயில் நடந்தது. இந்த ஒற்றை வரி செய்தியில் மூலம்  நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வீண் ஆடம்பரம் தவிர்கபட்டது. திருமணங்களில் வீண் ஜம்பத்திக்கு தேவைக்கு அதிகமாக உணவுகள் பரிமாறப்பட்டு அவை சாப்பிடாமல்  வீணாக்கப்படும் தவிர்க்க பட்டது. ஒரு புள்ளி விவரம் சொல்கிறது  இந்தியாவில் ஒரு நாளைக்கு ரூ .244 கோடி மதிப்புள்ள சமைத்த  உணவு குப்பையில் கொட்டபடுகிறது அல்லது வீணாக்குகிறது: அதேசமயம் கிட்டத்தட்ட 194 மில்லியன் இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் பசியுடன் உறங்குகிறார்கள், பண்டிகை மற்றும் திருமண விழாக்களில் இந்த அளவு கூடும்.  மின்சார செலவு, முகூர்த்த நாட்களில்  போக்குவரத்து நெரிசல் அதற்கான எரிபொருள் மிச்சம். நமது வாழ் நாள்  சேமிப்பில் பெரும்பகுதி நம் பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விழாவுக்கே செலவழிக்க படுகிறது. குறைந்த பட்சம் ஐந்து லட்சத்தில் இருந்து கோடிகளில்  திருமணத்திற்கு செலவாகிறது.  அந்த கால திருமணங்கள் பெரும்பாலும் அவரவர் வழக்கப்படி அறுவடை காலங்களில்   மணமகன் அல்லது மணமகள்  இல்லத்திலேயே நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடத்தப்பட்டது. மிகுந்த வசதி படைத்தவர்கள் தவிர பெரும்பாலும் பணிஒய்வில் கிடக்கும் பணத்திலோ அல்லது கடன் பட்டோ திருமணம் செய்து விட்டு வாயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருகிறார்கள். இது கொரான நமக்கு சொல்லி தந்த பாடம்
இனி ஒரு விதி செய்வோம் சொந்த வீடு இருப்பவர்கள் அவரவர் வழக்கப்படி   மணமகன் அல்லது மணமகள்  இல்லத்திலேயே நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடத்தி விட்டு (இப்போது எல்லா திருமணங்களும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்) அருகில் உள்ள சார் பதிவாளர் அலுவலத்தில் பதிவு செய்து கொள்ளலாம் சொந்த வீடு இல்லாதவர்கள் சார் பதிவாளர் அலுவலத்தில் திருமணம் மற்றும்  பதிவு செய்து கொண்டு ஹோட்டலில் விருந்து வைத்து கொள்ளலாம்.
குறிப்பு – அடுத்து –ஆன்மிகம் –பொருளாதாரம்- வணிகம் பற்றியும் எழுதுவேன்












Wednesday 11 December 2019


            கார்த்திகை தீபம் எப்போதும் என் வாழ்க்கையில் மிகவும் தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத பண்டிகைகளில் ஒன்றாகும், ஏனென்றால் அது என் அம்மாவைப் பற்றிய நினைவுகளை மீட்டளிப்பவை . இது பண்டிகைமகளிருக்கு  முக்கியத்துவம் வாய்ந்த  பண்டிகைகளில் ஒன்றாகும் . இந்த பண்டிகை  நாள் முழுதும் விரதம் இருப்பது மற்றும்  மாலை வேலையில் வீடு முழுதும் அகல் விளக்கு ஏற்றுவது முக்கிய நிகழ்வு. . பொதுவாக அம்மா கொஞ்சம் நோய்வாய்ப்பட்டவர் எனவே அப்பா அம்மாவை விரதம் இருக்க வேண்டாம் என்று சொல்வார் ஆனால் அவர் பேச்சை கேட்க்க மாட்டார், காபி  கூட உட்கொள்ளாமல் நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள். சமையல் செய்ய  வீட்டை சுத்தம் செய்ய என்று கடினமாக செய்வதாலும், உணவு  இல்லாமல் நீண்ட நேரம் இருப்பதாலலும் நிச்சயமாக் அன்று ஜுரம் வந்துவிடும்.
விரதம் மட்டுமல்லாமல் அகல் விளக்கு ஏற்றுவது பெரிய வேலை எங்கள் வீடு சற்றே  பெரிய வீடு அதனால் சுமார்  30 /40 விளக்கிற்கு குறையாமல் ஏற்றவேண்டும். விளக்கு ஏத்தறது பெரிய வேலை, கல்யாணமுருங்கை இலை மேல பசுஞ்சாணத்தை வைத்து அதன் மேல் அகல் வைத்து ஏற்ற வேண்டும்.நான் எப்போதும் அம்மாவுக்கு உதவியாக இருப்பேன், மேலும் இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவங்க ரெடி பண்ணி தர தர நான் ஒன்னொன்னா , திண்ணை,மாடங்கள், மாட்டுகொட்டகை,குப்பைமேடு கிணறு, அரிசிபானை எல்லா இடத்திலும் வைக்கவேண்டும், கார்த்திகை மாதம் என்பதால் சில நேரங்களில்  மழை பெய்யும்.அப்போது ஏற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும்
                எல்லாம் முடிந்து மாலைதான் அம்மா தீபம் பார்த்திவிட்டு சாப்பிடுவார் அப்போதும் அரிசி சாப்பாடு கிடையாது ,பழங்கள் இளநீர் மற்றும் கடலை பருப்பு உக்கிளிதான்  அப்போதெல்லாம் ஆப்பிள் சாத்துகுடி பழங்கள் அரிதாகத்தான் கிடைக்கும், அப்பா, அம்மாவுக்கு விரதம் முடித்து சாப்பிடும் போது கட் பண்ணி கொடுப்பார், நாங்களெல்லாம் (உமா கர்ணா,குப்பன் ) தூர இருப்போம் ஆனால் சாவித்திரி பகலெல்லாம் நல்ல சாப்பிட்டுவிட்டு மாலை விரதம் இருக்கிறேன் என்று  அம்மாவுடன் பழம் சாப்பிடும் (அப்பா செல்லம்). அப்பா கவனிக்காத நேரத்தில் எங்க கிட்ட பழம், தேங்காய் எல்லாம் அம்மா தூக்கி தூக்கி போடுவாங்க, நாங்க கேட்ச் புடிச்சி சாப்பிடுவோம்.   
அந்த நாட்களில் எங்கள் ஊரில் தீபாவளியை விட கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாட படும் பாட்டாசுகள் வெடிப்பார்கள். ஆனால் நாங்க பட்டாசு வெடிக்க முடியாது அப்பா வாங்கிவரும் பட்டாசை எல்லாம் எங்க வீட்டு ஆள் நாகப்பன் கிட்ட கொடுத்தது வெடிக்க சொல்வார் நாங்களெல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். ஒரு மத்தாப்பும் ஒரு கேப், ஒரு சுறு சுறு  வத்தியும் நாங்க வெடிக்க முடியும். ஆண் பனங்காயில்  இருந்து செய்யப்படும் “மாவலி” என்று  ஒரு சொக்க பனை கொளுத்தி சுற்றுவோம்.
எல்லாம் முடிந்து நாடு இரவில் அம்மா வுக்கு நிச்சயம்மாக கடுமையான ஜுரம் வந்து விடும் ஒரு சில சமயங்களில் வலிப்பும் வந்து விடும், நாங்களெல்லாம் மிகவும் பயந்து விடுவோம், இரவு முழுதும் தூங்க மாட்டேன் அம்மா மூக்கில் கை வச்சி அடிக்கடி மூச்சு விடராங்கலான்னு பயத்துடன் பார்ப்பேன். எங்க அம்மா இறந்து விடுவார் என்று நினைத்து பார்க்கவே நான் பயப்படுவேன். இவை எல்லா கனவாக கானலாக போய்விட்டது.
         சர்கஸில் ஒரு கலைஞர் ஒரே சமயத்தில் பல பந்துகளை தட்டி விளையாடுவார் ஒரு பந்து அல்லது சில பந்துகளோ தவறி விழுந்து விட்டால் சர்கஸில் கலைஞர் விழுந்துவிட்ட பந்துகளை பற்றி கலைபடாமல் இருக்கின்ற பந்துகளை தட்டி விளையாடுவார். விழுந்த பந்தை கவனித்தால் இருக்கின்ற பந்தும் விழுந்து ஆட்டம் முடிந்து விடும். அதைப்போலவே நானும் இருக்கின்ற பந்திகளி வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறேன் (வாழ்கிறேன்.) இந்த ஆண்டும் கார்திகை தீபம் வந்தது கார்த்திகை தீபம் ஏற்றினோம்
NOW I AM PLAYING MY GAME WITH REMAINING BALLS


Friday 26 July 2013

 எனது அமெரிக்க அனுபவங்கள்---      25/07/2013                                          
 இந்தியர்களை சந்திக்கும்போது

நான் இங்கு  முன்னரே குறிப்பிட்டது போல பெரும்பாலான இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பேசிக்கொள்வதில்லை.  ஆனால் ஒரு சுவையான அனுபவம்,  Folsom California ல் உள்ள   எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் பெரும்பாலும் இந்தியர்கள் இருக்கிறர்கள், இப்போதெல்லாம் அவர்கள் முகத்தை திருப்பிக்கொண்டு போனாலும் நான் விடுவதில்லை நானே வலிய சென்று ஹாய் i am from India என்று கை கொடுப்பேன் ஆனால் அவர்கள் , நான் இந்தியன் என்று முதலில் சொல்லுவதில்லை மாறாக நான் குஜராத்தி,நான் ஆந்திரா, நான் தமிழ்நாடு என்று இங்கும்  தங்கள் மொழிவாரியாக பிரிந்தே வாழ்கிராகள்.  

Sunday 27 January 2013

விஸ்வருபம்  படத்தை    பார்க்க விடாமல்  தடை விதிப்பது உண்மையில் இது கண்டித்தக்க கலாச்சார வன்முறை தான்,  கமல் ஒரு நடிகன் மட்டுமல்ல ஒரு தலை சிறந்த அறிவார்ந்த   சீர்திருத்தவாதி. கமலுக்கு பொருளாதார நஷ்டம் மட்டுமே  ஆனால், உலக தரத்தினை நோக்கி செல்லும்  தமிழ் சினமா இனி மெல்ல சாகும். மதவாதிகளின் மிரட்டலால் இது போன்ற தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி நல்ல  தரமான படங்களை எடுப்பது தடுக்கப்பட்டு, வெறும் மசாலா படங்களும்  பாலுணர்ச்சி தூண்டும் படங்கள் எடுக்கும் வியாபாரிகள் தான் வளருவார்கள், நல்ல படைப்பாளிகள் காணமல் போவர்கள்.